கிளாம்பாக்கத்தில் முக்கியப் பேருந்து இயக்க மாற்றங்கள்!
சிஎம்டிஏ பூங்காவில் இயக்கப்பட்ட திருவண்ணாமலை மார்க்க பேருந்துகள் இனி கிளாம்பாக்கத்தில் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிகப் பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்பட்ட பேருந்துகள், இன்று (அக்டோபர் 18) முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தின் வழக்கமான நடைமேடைகளில் இருந்தும் இயக்கப்படுகின்றன.
திருவண்ணாமலை மார்க்கம்:
போளுர், சேத்துப்பட்டு, வந்தவாசி செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தின் நடைமேடை எண் 7-ல் இருந்தும் இயக்கப்படும்.
கும்பகோணம் மார்க்கம்:
கும்பகோணம், நாகப்பட்டினம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தின் நடைமேடை எண் 5-ல் இருந்தும் இயக்கப்படும்.
மேற்கண்ட வழித்தடங்களுக்கான பேருந்துகள் மறைமலைநகர் மற்றும் CMDA காலநிலைப் பூங்கா தற்காலிகப் பேருந்து நிலையங்களில் இருந்து வழக்கம்போல் இயக்கப்படாது.