☰
×

டாஸ்மாக் கடைகளுக்கு ரூ.5000 வரை பராமரிப்பு தொகை 

 

டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளுக்கு  ரூ.5000 வரை பராமரிப்பு தொகை வழங்க தவெக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளுக்கு அக்டோபர் 1 முதல் மாதந்தோறும் பராமரிப்புத் தொகை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. TASMAC ஊழியர்களின் நலன் மற்றும் பணிச்சூழலை மேம்படுத்த, பராமரிப்பு தொகை வழங்க TASMAC நிர்வாக இயக்குநர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். மாநகராட்சி பகுதியில் உள்ள கடைக்கு ரூ.5,000
நகராட்சி / பேரூராட்சி பகுதியில் உ ள்ள கடைக்கு ரூ.4,000 ஊரக / கிராம பஞ்சாயத்து பகுதியில் உ ள்ள கடைக்கு ரூ.3,000 வழங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.