×

30ஆவது தேசிய மஹாவீர் விருது- யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

 

இரக்கம், சேவை மற்றும் சமூக தாக்கத்தை கொண்டாடும் மூன்று தசாப்தங்களை நினைவுகூறும் வகையில், புகழ்பெற்ற 30ஆவது தேசிய மஹாவீர் விருதுகளுக்கான விண்ணப்பங்களை பகவான் மஹாவீர் ஃபவுண்டேஷன் வரவேற்கிறது. 

அஹிம்சை மற்றும் சைவம் (Non-Violence & Vegetarianism), கல்வி (Education), மருத்துவம் (Medicine), சமூக நலன் மற்றும் பொதுச் சேவை (Community & Social Service) ஆகிய துறைகளில் தனிநபர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் ஆற்றிய தன்னலமற்ற சேவையை அங்கீகரிக்கும் இந்தியாவின் மிக மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றாக இது திகழ்கிறது. ஒவ்வொரு விருதுக்கும் ₹10 லட்சம் ரொக்கப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்படும். விண்ணப்பங்கள் 31 ஜூலை 2026 வரை ஏற்கப்படும்.  மனித நேயத்தைப் பெருமைப்படுத்தும் சேவையைக் கொண்டாடும் வகையில், பகவான் மஹாவீர் ஃபவுண்டேஷன், கடந்த 29 ஆண்டுகளில் 26 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 101 சிறப்புமிக்க தனிநபர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளைக் கவுரவித்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 17 விருதாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்தியாவின் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி நீதியரசர் எம். என். வெங்கடாசலையா தலைமையேற்கும் புகழ்பெற்ற நடுவர் குழுவினால் விருதாளர்கள் தேர்வு செய்யப்படுவர்; இது விருதுகளின் நம்பகத்தன்மையான செயல்முறையை உறுதிசெய்கிறது. 

தேசிய மஹாவீர் விருதுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

•    அஹிம்சை மற்றும் சைவம், கல்வி, மருத்துவம், சமூக நலன் மற்றும் பொதுச் சேவை ஆகிய துறைகளில் சிறந்த சேவை புரிவோர்  விண்ணப்பிக்கலாம்!

•    இந்திய உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எம். என். வெங்கடாசலையா தலைமையிலான நடுவர் குழு, விருதாளர்களைத் தேர்வு செய்யும்!


மஹாவீர் விருதுகளுக்கான நடுவர் குழு: 

•     நீதியரசர் எம். என். வெங்கடாசலையா, இந்திய உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி – தலைவர், மகாவீர் விருதுகள்
•     நீதியரசர் டி. ஒய். சந்திரசூட், இந்தியாவின் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி
•     எஸ். குருமூர்த்தி, பகுதி நேர இயக்குநர், இந்திய ரிசர்வ் வங்கி 
•    பேராசிரியர் பி. எம். ஹெக்டே, தலைவர், பாரதிய வித்யா பவன், மங்களூர் கேந்திரா
•    டி. எஸ். கிருஷ்ணமூர்த்தி, இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்
•    டி. ஆர். மேத்தா, செபி அமைப்பின் முன்னாள் தலைவர்
•    பிரபாத் குமார், இந்திய அரசின் முன்னாள் அமைச்சரவைக் செயலர் மற்றும் ஜார்கண்ட் முன்னாள் ஆளுநர்
•    நீதியரசர் ஜி. எஸ். சிங்‌வி, இந்திய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி
•    டாக்டர் ஷிவ் குமார் சரின், இயக்குநர் மற்றும் துணைவேந்தர், இன்ஸ்டிடியூட் ஆஃப் லிவர் அண்ட் பிலியரி சயின்ஸ், புதுடெல்லி.

விருது பற்றி:

1995 முதல், பகவான் மகாவீர் ஃபவுண்டேஷன், அஹிம்சை மற்றும் சைவத்தைப் பரப்புதல், கல்வி, மருத்துவம், சமூக நலன் மற்றும் பொதுச் சேவை ஆகிய துறைகளில் இந்தியா முழுவதும் சிறப்புப் பெற்ற தனிநபர்களுக்கும், தன்னார்வ அமைப்புகளுக்கும் அங்கீகாரமாக மகாவீர் விருதுகளை வழங்கி வருகிறது. இவ்விருதுகள் இந்தியக் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், ஆளுநர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட புகழ்பெற்ற தலைவர்களால் வழங்கப்பட்டுள்ளன; இது அவற்றின் தேசிய அந்தஸ்தையும் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது. பரிந்துரை படிவங்களை www.bmfawards.org என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
.