மராட்டிய துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழப்பு - எஸ். ஜி. சூர்யா இரங்கல்..!
Jan 28, 2026, 10:53 IST
பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார், அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர், NDA கூட்டணியின் அங்கமான NCP கட்சி தலைவர் திரு.அஜித் பவார் அவர்கள் விமான விபத்தில் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றிய ஒரு சிறந்த தலைவரை நாம் இழந்துள்ளோம். இது அந்த மாநிலத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி.