☰
×

மதுராந்தகம் இடைத்தேர்தல்.. தொடர்ந்து முன்னிலை வகிக்கும் தவெக..! அதிமுகவின் சரிவுக்கு பாமக தான் காரணமா?

 

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால், அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 

அதிமுக – பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமக, தற்போதைய இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்காதது அக்கட்சியின் வாக்கு சரிவுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் விவாதிக்கப்படுகிறது. இதற்கு மதுராந்தகம் தொகுதியின் மங்கலம் கிராமத்தில் பதிவான வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை உதாரணமாகச் சுட்டிக்காட்டுகின்றனர். கடந்த மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிடும்போது, மங்கலம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் கூடுதலாக 200 வாக்குகளையும், திமுக 83 வாக்குகளையும் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், அதிமுக 821 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 124 வாக்குகளையும் இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கு மாற்றங்கள் அரசியல் கட்சிகளிடையே கவனத்தைப் பெற்றுள்ள நிலையில், பாமகவின் ஆதரவு நிலைப்பாடு அதிமுகவின் வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படுத்தியதா என்பது குறித்த விவாதமும் எழுந்துள்ளது.

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து 8 சுற்றுகளாக முன்னிலை வகித்து வரும் நிலையில், அக்கட்சியினர் உற்சாகமாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தவெக வேட்பாளரின் முன்னிலையைக் கொண்டாடும் வகையில், தொண்டர்கள் முதல்வர் விஜய் செய்வதைப் போன்ற கைச் சைகைகளைச் செய்தும், விசில் அடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

TVK - 31,333

DMK - 20839

ADMK - 17989

NTK - 1069

CPM - 866