×

“ரூ.5 லட்சம் வாங்கிகொண்டு பதவி! பெண்களை உருவ கேலி செய்கிறார்”- தவெகவில் வெடிக்கும் புகார்! கண்டுகொள்ளாத விஜய்

 

தவெகவில் பரபரப்பு! மதுரை மாவட்ட செயலாளர் பெண்களை பாடி ஷேமிங் செய்வதாக புகார்தவெகவின் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் கல்லாணை விஜயன்பன் மீது தொண்டர்கள் புகார் அளித்துள்ளனர்.

தமிழக வெற்றிக்கழகத்தின் மதுரை வடக்கு மாவட்ட செயலாளராக கல்லாணை விஜயன்பன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் த.வெ.க மாவட்ட செயலாளர் கல்லாணை  மாவட்ட நிர்வாகிகள் பதவிகள் வழங்குவதற்கு வட்டச் செயலாளருக்கு 5 லட்சம் ரூபாய் முதல் கோடிக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு பதவி வழங்கிவருகிறார் எனவும், பெண் தொண்டர்களை பாடி ஷேமிங் செய்யும் வகையில் கேலி செய்வதாகவும், தங்கள் பகுதியில் உள்ள மக்கள் பிரச்சனைகளை சொன்னால் எப்போதும் பிரச்சினைகளோடு வருகிறீர்கள் என கேலி செய்வதாகவும், அமைச்சர் மூர்த்தியிடம் பணம் பெற்றுக்கொண்டு மக்களுக்கான பிரச்சினை தொடர்பாக எந்தவித போராட்டத்தையும் நடத்தாமல் கைதுக்கு பயந்து கொண்டு பணியாற்றுவதில்லை என கூறியும், கட்சிசார்பில் அச்சடும் அனைத்து போஸ்டர்களிலும் தனது படம் இடம்பெற வேண்டுமென தொண்டர்களை மிரட்டி வருவதாகவும், கட்சிப் பதவியை சாதி மதம் பார்த்து வழங்குவதாக கூறி  மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விசாலாட்சிபுரம் காளாங்கரை பகுதியைச் சேர்ந்த த.வெ.க. தொண்டர்கள் சிலர் தனது மாவட்ட செயலாளருக்கு எதிராக பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

சாதி மதம் பார்த்து பதவி வழங்கும் மாவட்டச் செயலாளரே , பெண்களை கேலி செய்யும் மாவட்ட செயலாளரே, பணத்திற்கு பதவியை விற்கு மாவட்ட செயலாளரே என மாவட்ட செயலாளருக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர். இது குறித்து பேசிய பெண் தொண்டர்கள், “தவெக மாவட்டச் செயலாளர் கல்லாணை பெண் தொண்டர்களை பாடி ஷேமிங் செய்து கேலி பண்ணுகிறார். பல லட்ச ரூபாய் வாங்கிக்கொண்டு பதவியை தருகிறார். தளபதிக்காக உழைத்தவர்களுக்கு பதவி வழங்காமல் ஒதுக்கி வைக்கிறார். அமைச்சர் மூர்த்தியிடம் பணம் பெற்றுக் கொண்டு மக்கள் பிரச்சனைக்கு எந்தவித போராட்டமும் நடத்துவதில்லை, கல்லாணையின் பிறந்த நாளுக்காக பிரியாணி போட வேண்டும் என நிர்வாகிகளை கட்டாயப்படுத்துகிறார். மன்னவரே என தனக்குத்தானே போஸ்டர் அடித்து ஒட்டுவதை கூட கண்டு கொள்வதில்லை. தளபதி விஜய் ரசிகராக இருந்து பல ஆண்டுகளாக உழைத்தவர்களுக்கு பதவி வழங்காமல் பணம் கொடுத்தவர்களுக்கு மட்டும் தமிழக வெற்றி கழகத்தில் பதவி வழங்கப்படுகிறது. மேலும் சாதி, மதம் பார்த்து கட்சியில் நிர்வாகிகளுக்கு பதவி வழங்குகிறார். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்கள் இதுபோன்ற பிரச்சனைகளை நேரடியாக தலையிட வேண்டும். கட்சிக்காக உழைத்தவர்களுக்கு  பதவி வழங்காத மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தனர்.

எனவும் க எனவும் தெரிவித்தனர்