☰
×

"நான் நிஷாந்த் பேசுறேன்.." ஒற்றை வார்த்தையால் வசமாக சிக்கிய கொள்ளையன் 

 

மதுரை பைபாஸ் சாலையில் புதிதாகத் திறக்கப்பட்ட தனிஷ்க் நகைக்கடையில் சுமார் 11 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியது. 

மதுரை காளவாசல் பைபாஸ் சாலை, நேரு நகர் நேதாஜி மெயின் ரோட்டில் செயல்பட்டு வந்த தனிஷ்க் ஜுவல்லரி நகைக்கடையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், காதலியின் ஆசையை நிறைவேற்றுவதற்காகத் திட்டமிட்டு தனி ஒருவனாகக் கொள்ளையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நிஷாந்த் கைது செய்யப்பட்டார்.  கடந்த நான்கு நாட்களாக வெவ்வேறு ஊர்களுக்குச் சென்று காவல்துறையினரின் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்த நிஷாந்த், நவம்பர் 16 ஆம் தேதி பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் பயணம் செய்துள்ளார். கடந்த நவம்பர் 16ஆம் தேதி காலையில் தர்மபுரியில் கொள்ளையன் நிஷாந்த உடன் அவனது நண்பர்கள் மூன்று பேர் பெங்களூரு செல்லும்  தனியார் ஆம்னி பேருந்தில் நிஷாந்தை ஏற்றிவிட்டு கிளீன்ர்க்கு டிக்கெட் தொகைக்கு மேல் 500 ரூபாய்  கொடுத்துள்ளனர். பேருந்தில் இருந்த நிஷாந்தை அடையாளம் கண்டுகொண்ட அந்தப் பேருந்தின் ஓட்டுநர், இது குறித்து உடனடியாக அதியமான்கோட்டை காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கொடுத்ததை அடுத்து அங்கு சென்ற போலீசார் நிஷாந்தை கைது செய்தனர். 

இதுகுறித்து பேருந்து ஓட்டுநர் கூறுகையில், "கிளீனர் போனை வாங்கி யாரிடமோ நிஷாந்த் பேசினான். நான் நிஷாந்த் பேசுகிறேன் என கூறியதால் சந்தேகம் வந்தது. போன் பேசும்போது மாஸ்க்கை கழற்றிவிட்டு பேசினான். என்னிடம் ஓடிவந்து கிளீனர் கூறினார். உடனடியாக போலீசில் தகவல் தெரிவித்து விட்டோம். ரெஸ்ட் ரூம் செல்ல வேண்டும் என நிஷாந்த் கூறினான். பஸ்ஸை நிறுத்த முடியாது என கூறினோம். பஸ் கதவை மூடிவிட்டு டீக்கடைக்கு சென்றோம். பஸ் கதவை திறக்காததால் கத்தினான். டிரைவர் சீட் ஜன்னலில் இருந்து வெளியே குதித்தான். வெளியே குதித்த நேரத்தில் போலீஸ் வந்து பிடித்துவிட்டனர். போலீசார் சரியான நேரத்தில் வந்து கைது செய்தனர்'' என்றார்.