×

மதுரையில் 10 ரூபாய்க்கு முழு சாப்பாடு வழங்கிய ராமு தாத்தா காலமானார்!

மதுரையில் 50 வருடங்களுக்கு மேலாக ஒரு ரூபாய்க்கு தொடங்கி கடைசியாக 10 ரூபாய்க்கு முழு சாப்பாடு வழங்கிய ராமு தாத்தா உடல்நலக்குறைவால் காலமானார். மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே ஒரு சிறிய கடையில் மதுரை மக்கள் மட்டுமின்றி பல்வேறு ஊர்களிலிருந்தும் வரும் மக்களின் பசியாற்றி வந்தவர் ராமு தாத்தா. 1957 ஆம் ஆண்டு வடலூரில் உள்ள வள்ளலாரின் சத்திய ஞான சபைக்கு சென்ற ராமு தாத்தா, வள்ளலாரை போன்று தானும் தன்னால் முடிந்தவரை ஏழை மக்களுக்கு
 

மதுரையில் 50 வருடங்களுக்கு மேலாக ஒரு ரூபாய்க்கு தொடங்கி கடைசியாக 10 ரூபாய்க்கு முழு சாப்பாடு வழங்கிய ராமு தாத்தா உடல்நலக்குறைவால் காலமானார்.

மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே ஒரு சிறிய கடையில் மதுரை மக்கள் மட்டுமின்றி பல்வேறு ஊர்களிலிருந்தும் வரும் மக்களின் பசியாற்றி வந்தவர் ராமு தாத்தா. 1957 ஆம் ஆண்டு வடலூரில் உள்ள வள்ளலாரின் சத்திய ஞான சபைக்கு சென்ற ராமு தாத்தா, வள்ளலாரை போன்று தானும் தன்னால் முடிந்தவரை ஏழை மக்களுக்கு உணவளிக்க வேண்டும் என்ற சேவையுணர்வில், 1967 ஆண்டு வெறும் ஒன்னே கால் ரூபாய்க்கு காய்கறி கூட்டுகளுடன் சாப்பாடு வழங்க தொடங்கினர். நாளடைவில் விலை வாசி உயர உயர 2 ரூபாய், 5 ரூபாய் எனச்சாப்பாட்டு விலையையும் ராமு தாத்தா சிறிது சிறிதாக உயர்த்தினார். கடைசியாக அவர் கடையில் முழு சாப்பாடு, மூன்று வகை கூட்டுகளுடன் ரூ.10க்கு விற்கப்பட்டது. ராமு தாத்தா கடையில் ராஜாஜி மருத்துவமனைக்கு வருபவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்கவருபவர்கள் என அனைவருமே வயிறார உணவு அருந்தி சென்றனர்.

89 வயதாகும் ராமு தாத்தா, கடந்து பத்து நாட்களுக்கும் மேலாக கடுமையான உடல்நலக்குறைவால் அவதிப்பட்டுவந்தார். இந்நிலையில் இன்று அவர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு உறவினர்களை மட்டுமின்றி அவரது கையால் உணவருந்திய அந்த ஊர் மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.