×

“ஜனநாயகத்திற்கு சான்றிதழ் வழங்காதது அப்பட்டமான அரசியல் முயற்சி”- சு.வெங்கடேசன்

 

அரசியல் சாசன சட்டத்தின் முதல் பக்கத்திலேயே திமிலுள்ள காளையின் புகைப்படம் இடம்பெற்றிருப்பது தமிழர்களுக்கு பெருமை என எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்கலிடம் பேசிய சு.வெங்கடேசன், “அரசியல் சாசன சட்டத்தின் முதல் பக்கத்திலேயே திமிலுள்ள காளையின் புகைப்படம் இடம்பெற்றிருப்பது தமிழர்களுக்கு பெருமை.. ஜனநாயகன் திரைப்படம் பேசு பொருளாக உள்ள நிலையில் திரைப்படத்திற்கு சென்சார் வழங்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்காமல் எவ்வளவு தூரம் இழுத்தடிக்க முடியுமோ அவ்வளவு தூரம் இழுத்தடிக்கிறார்கள். இது கலை வெளிப்பாட்டு உரிமையை, சுதந்திரத்தை தனது அதிகாரத்திற்க்காக  அடிபணிய வைக்கும் அப்பட்டமான அரசியல் முயற்சி. இது சம்பந்தப்பட்ட விஜய் பிரச்சனை மட்டுமல்ல, ஜனநாயகத்தின் பிரச்சனை. பாதிக்கப்பட்டவர் குரல் கொடுத்தாரா என்பதைவிட நாம் பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பதே கடமை” என்றார்.