×

இந்திய கால்பந்து குழு வீரர்கள் தேர்வுக்கு ஜோதிடர் நியமனமா? - சு.வெங்கடேசன் கேள்வி

 

இந்திய கால்பந்து குழு வீரர்கள் தேர்வுக்கு ஜோதிடர் நியமிக்கப்பட்டாரா? இது போன்ற செயல்பாடு இந்தியாவின் மதிப்பை உலக அரங்கில் கெடுத்து விடாதா? என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்றத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர் நல அமைச்சரிடம், இந்தியக் கால்பந்து குழு வீரர்களை தேர்ந்தெடுக்க அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு ஜோதிடர் ஒருவரின் பணியை பயன்படுத்தியுள்ளதாக வந்துள்ள செய்தி அரசுக்கு தெரியுமா? தெரியும் எனில் விவரங்களை தாருங்கள்... இப்படிப்பட்ட செயல்பாடுகள் இந்தியாவின் மதிப்பை உலக அரங்கில் கெடுத்து விடாதா? இது குறித்து அரசு ஏதேனும் அறிவுரைகளை அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு வழங்கியுள்ளதா? என்று நட்சத்திரக் கேள்வி எண் 38/05.12.2023 வாயிலாக சு. வெங்கடேசன் எம்பி கேள்வி எழுப்பியிருந்தார்.