மதுரையில் பரபரப்பு : பதவியேற்புக்கு முன்பே "அமைச்சர்" பட்டம்! அதிரவைக்கும் காங்கிரஸ் வேட்பாளரின் போஸ்டர்..!
மதுரை மேலூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பெ.விஸ்வநாதனை "அமைச்சர்* என குறிப்பிட்டு நகரின் லல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு
மேலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன் 2,731 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது தொகுதியான மேலூரில், தலித் சமூகத்தைச் சேர்ந்த விஸ்வநாதனை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவித்தது. முக்குலத்தோர் சமூக மக்கள் அதிகமுள்ள பகுதியில், தலித் வேட்பாளர் வென்றிருப்பது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் இந்த வெற்றிக்கு தவெகவும் சைலண்ட்டாக உதவி இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் தவெக வேட்பாளர் மதுரைவீரன் பெற்ற வாக்குகளே, காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக மாறி இருக்கிறது. இதன் மூலமாக அதிமுகவின் கோட்டையை காங்கிரஸ் கட்சி சிதறடித்திருப்பதாக அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக ஆட்சியமைப்பதற்கு காங்கிரஸ் கட்சி, மதவாத சக்திகளை அனுமதிக்க கூடாது என்ற நிபந்தனையுடன் ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழக அளவில் இதை காங்கிரஸ் கட்சியின் வியூகம் என்று பார்த்தாலும், தேசிய அளவில் இந்தியா கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
இந்நிலையில் மதுரை மேலூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பெ.விஸ்வநாதனை "அமைச்சர்* என குறிப்பிட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் விஜய் முதல்வராக அறிவிக்கப்பதாக சூழலில் இந்த போஸ்டர் பேசு பொருளாக மாறியுள்ளது.