×

நாளை மறுநாள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உட்பட முக்கியமான கோவில்கள் நடை அடைப்பு...!!

 

வருகின்ற மார்ச் 3ம் தேதி கோவிலின் நடை அடைக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2026-ஆம் ஆண்டு மார்ச் 3-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்தியாவில் பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை (சுமார் 3 மணி நேரம் 27 நிமிடங்கள்) நிகழவுள்ளது. பொதுவாகவே கிரகண காலத்தின் போது கோவில்கள் மூடப்படுவது வழக்கமான நடைமுறையாகும்.

அந்த வகையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பூஜைகள் முடித்து அன்று காலை 8.20 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டு, கிரகணம் முடிந்து இரவு 7.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

அதேபோல், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் முடித்து காலை 8.20 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டு, கிரகணம் முடிந்து பிறகு கிரகண பூஜைகள் செய்யப்பட்டு இரவு 7.35 மணிக்கு நடை திறக்கப்படும்.

அழகர்கோயில் மலைமேல் உள்ள சோலைமலை முருகன் கோயிலில் பூஜைகள் முடித்து அன்று மதியம் 1 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டு, மீண்டும் மறுநாள் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படும் அதன் பின்னரே காத்திருக்கும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.