×

மதுரையில் அமலுக்கு வந்த பொதுமுடக்கம் : என்னென்ன இயங்கும் தெரியுமா?

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. வரும் 30ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ள இந்த ஊரடங்கில் மக்கள் அனாவசியமாக வெளியில் செல்லக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் மதுரையிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களில் இன்று முதல் வரும் 30-ம் தேதி
 

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. வரும் 30ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ள இந்த ஊரடங்கில் மக்கள் அனாவசியமாக வெளியில் செல்லக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேசமயம் மதுரையிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களில் இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை பொது ஊடகம் அமலுக்கு வந்துள்ளது.

பால் விற்பனையகங்கள் , மருந்தகங்கள், அம்மா உணவகங்கள் வழக்கம் போல் செயல்படும் என்றும் காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் 2 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி என்றும் உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ரயில் மற்றும் விமான பயணிகள் வாகனங்களில் செல்லலாம் போன்ற அறிவுறுத்தல்கள் சொல்லப்பட்டுள்ளன.

மதுரையில் பொது முடக்கம் அமலுக்கு வந்துள்ள நிலையில் 6 சோதனை சாவடிகள் மதுரை மாவட்ட எல்லைகள் 8 சோதனை சாவடிகள் என மொத்தம் 14 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவசியம் இன்றி வெளியே வருபவர்கள் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் முடிவெடுத்துள்ளனர்.