×

தந்தை-மகன் சிறையில் உயிரிழந்த விவகாரம்.. தாமாக முன்வந்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை விசாரணை!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் வசித்து வந்தவர் ஜெயராஜ். அவரது மகன் பென்னிஸ். இவர்கள் இருவரும் பழைய பேருந்துநிலையம் காமராஜர் சிலை அருகே செல்போன் மற்றும் மரக்கடை வைத்திருந்த நிலையில், கடந்த 19 ஆம் தேதி ஊரடங்கால் கடையை அடைக்குமாறு போலீசார் கூறியுள்ளனர். அதனால் போலீசாருக்கும் இவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதால், இரண்டு பேரும் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பூதாகரமாக உருவெடுத்திருக்கிறது.
 
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 எஸ்ஐகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி சஸ்பெண்ட் செய்தார். சிறையில் அவர்கள் உயிரிழந்தது மக்களிடையே பெரும் எதிர்ப்பை கிளப்பி வரும் நிலையில், நாளை முழு கடையடைப்பு என்று தமிழ்நாடு வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக சிறைத்துறை ஏடிஜிபி 4 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த நிலையில், பூதாகரமாக உருவெடுத்து வரும் தந்தை- மகன் சிறையில் உயிரிழந்த வழக்கை மதுரை உயர்நீதிமன்றக்கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்த உள்ளது. மேலும், இன்று அந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.