×

‘சாத்தான்குள சம்பவம் போல இனிமேல் நடக்கக்கூடாது’..வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது நீதிமன்றம்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி, விசாரணையை கையிலெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் படி இந்த வழக்கில் 24 மணி நேரமாக அதிரடி விசாரணை மேற்கொண்ட போலீசார், கிடைக்கப்பெற்ற சாட்சியங்களின் அடிப்படையில் 5 காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய உத்தரவு பிறப்பித்தனர். அதன் படி இன்று காலை 6:30 மணிக்குள் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், காவல்
 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி, விசாரணையை கையிலெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் படி இந்த வழக்கில் 24 மணி நேரமாக அதிரடி விசாரணை மேற்கொண்ட போலீசார், கிடைக்கப்பெற்ற சாட்சியங்களின் அடிப்படையில் 5 காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய உத்தரவு பிறப்பித்தனர்.

அதன் படி இன்று காலை 6:30 மணிக்குள் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து இந்த இரட்டை கொலை வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கைது செய்யப்பட்ட காவலர்களை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறு உத்தரவு பிறப்பித்தனர்.

அதுமட்டுமில்லாமல் தூத்துக்குடி மாவட்ட நீதிபதிக்கு அனைத்து அதிகாரங்களும் தரப்படும் என்று தெரிவித்தனர். இந்த நிலையில், இரட்டை கொலை வழக்குத் தொடர்பாக சரமாரியான கேள்விகளை முன்வைத்த நீதிபதிகள் விரிவான உத்தரவு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர். மேலும், சாத்தான்குளம் சம்பவம் போன்ற இனிமேல் எந்த சம்பவமும் நடக்கக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.