×

மதுரை எய்ம்ஸ் திறப்பது எப்போது?- நிர்வாக அதிகாரி அனுமந்தராவ் பேட்டி

 

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி பணிகள்  ஓரிரு ஆண்டுக்குள் முழு பணியும் நிறைவு பெறும் என எய்ம்ஸ் நிர்வாக அதிகாரி அனுமந்தராவ் கூறியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய எய்ம்ஸ் நிர்வாக அதிகாரி அனுமந்தராவ், “பொங்கல் முதல் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி செயல்படும். 2026 பொங்கல் முதல் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி செயல்படும். 2027ஆம் ஆண்டிற்குள் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நிறைவு பெற்று செயல்பட தொடங்கும். முதற்கட்டமாக 150 படுக்கை வசதிகளுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி 2026ம் ஆண்டு பொங்கல் தினத்தன்று தொடங்கப்படும். மாதந்தோறும் கட்டிடப் பணிகள் குறித்த புகைப்படங்களை வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது” என்றார்.