×

ஒருவழியாக மதுரை எய்ம்ஸ்க்கு செயல் இயக்குநரை நியமித்தது மத்திய அரசு; இனி சுறுசுறுப்பாக பணிகள் நடைபெறும்!

2015ஆம் ஆண்டே தமிழகத்தில் எய்ம்ஸ் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அது வெறும் அறிவிப்பாகவே இருந்தது. இதனையடுத்து உயர் நீதிமன்ற தலையீட்டால் மதுரை எய்ம்ஸ் நிறுவும் இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஒருவழியாக சுமார் ஆயிரம் கோடி மதிப்பிலான எய்ம்ஸ் பணிகளை 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடி மதுரையில் அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு இப்போது வரை ஒரு துரும்பை கூட மத்திய அரசு தூக்கிப் போடவில்லை. இதனால் மத்திய அரசு மீது குற்றம்சுமத்தப்பட்டது. ஜப்பான் நிறுவனத்துடனான ஒப்பந்தம் தாமதமானதால்
 

2015ஆம் ஆண்டே தமிழகத்தில் எய்ம்ஸ் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அது வெறும் அறிவிப்பாகவே இருந்தது. இதனையடுத்து உயர் நீதிமன்ற தலையீட்டால் மதுரை எய்ம்ஸ் நிறுவும் இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஒருவழியாக சுமார் ஆயிரம் கோடி மதிப்பிலான எய்ம்ஸ் பணிகளை 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடி மதுரையில் அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு இப்போது வரை ஒரு துரும்பை கூட மத்திய அரசு தூக்கிப் போடவில்லை. இதனால் மத்திய அரசு மீது குற்றம்சுமத்தப்பட்டது. ஜப்பான் நிறுவனத்துடனான ஒப்பந்தம் தாமதமானதால் நிர்வாகப் பணிகள் தாமதமானதாக மத்திய அரசு கூறியது.

இச்சூழலில் நிர்வாகப் பணிகளை விரைவுப்படுத்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிர்வாக இயக்குநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. மத்திய சுகாதாரத் துறையின் அறிவிப்பின்படி ஏராளமானோர் இப்பதவிக்கு விண்ணப்பத்திருந்தனர். தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 34 பேர் தகுதியுடையவராகக் கருதப்பட்டனர்.

இதில் நான்கு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தமிழகம், ஜம்மு காஷ்மீர், குஜராத், இமாச்சலப் பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் தலா ஒரு செயல் இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி தமிழகத்திற்கு மங்கு ஹனுமந்த ராவ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது திருப்பதி எஸ்.வி. மருத்துவக் கல்லூரி தலைவராகவும், மூத்த பேராசிரியராகவும் பணியாற்றிவருகிறார்.