×

சென்னை பல்கலை. செமஸ்டர் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு...

 


சென்னை பல்கலைக்கழகத்தில் ஜனவரி 21 ஆம் தேதி முதல் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா  தொற்று  காரணமாக தமிழகத்தில் பல மாதங்கள் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன. கல்லூரிகளில் கடந்த ஓராண்டாகவே செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலகமவே நடைபெற்றன.  அந்த வகையில் இந்த ஆண்டும் கொரோனா பரவல் சற்று குறைந்திருந்ததை அடுத்து நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.  அதன்படியே சென்னை பல்கலைக்கழகத்தில் வரும் (ஜன) 21 ஆம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதி வேகமெடுத்திருக்கிறது. தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பும் 10 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இதனையடுத்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மருத்துவம் அல்லாத பிற கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 20 வரை விடுமுறைன் அளித்து அரசு உத்தவிட்டுள்ளது.  சென்னை பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு வரும் ஜனவரி 20 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது அதனை தொடர்ந்து 21 ஆம் தேதி முதல் நடைபெற இருந்த பல்கலைக்கழக  செமஸ்டர் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் செமஸ்டர் தேர்வுகளை ஒத்திவைப்பதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது.  மேலும் தேர்வுகளை எப்போது நடத்தலாம் என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.