×

அரியர் தேர்ச்சி விவகாரம்: மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண் வழங்க முடிவு!

அரியர் தேர்ச்சி விவகாரத்தில் குறைந்தபட்ச மதிப்பெண் வழங்க சென்னை பல்கலைக் கழகம் முடிவெடுத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலால் மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. அவை எப்போது நடத்தப்படும் என்ற கேள்வி வெகுவாக எழுந்த நிலையில், தமிழக அரசு திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதாவது, அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்தி காத்திருந்த மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு அரியர் மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றாலும், கல்வியாளர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த
 

அரியர் தேர்ச்சி விவகாரத்தில் குறைந்தபட்ச மதிப்பெண் வழங்க சென்னை பல்கலைக் கழகம் முடிவெடுத்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலால் மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. அவை எப்போது நடத்தப்படும் என்ற கேள்வி வெகுவாக எழுந்த நிலையில், தமிழக அரசு திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதாவது, அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்தி காத்திருந்த மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு அரியர் மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றாலும், கல்வியாளர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் நீதிமன்றம் வரைச் சென்றது. அரியர் தேர்ச்சி தொடர்பான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண் வழங்க சென்னை பல்கலைக்கழகம் முடிவெடுத்துள்ளது. இது குறித்து ஆலோசிக்க, ஆட்சிமன்ற கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தின் முடிவில், ஏப்ரல், மே மாதங்களில் தேர்வெழுத கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண் வழங்கலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.