×

கலைமகள் சபா முறைகேடு வழக்கு... சிறப்பு அதிகாரியை நியமிக்க உத்தரவு!

 

கலைமகள் சபா எனும் நிதி நிறுவனம் 5,33,356 உறுப்பினர்களிடம் பெற்ற முதலீடு மூலமாக தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கி ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டது. இந்நிறுவனத்துக்கு எதிராக முறைகேடு புகார்கள் வந்ததையடுத்து இந்த நிர்வாகத்தை கவனிக்க சிறப்பு அதிகாரியை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் ஒரு வழக்கறிஞர், சிறப்பு அதிகாரியை நியமித்தது. 

நிர்வாகம் மற்றும் சொத்துகளை விற்று உறுப்பினர்களுக்கு உரிய முதலீட்டுத் தொகையை வழங்கவும் 1999ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களுக்கு உரிய தொகை திருப்பி வழங்கப்பட்டது.கலைமகள் சபா நிறுவனத்துக்குச் சொந்தமான நிலங்களை விற்று தங்களது உறுப்பினர்களுக்கு உரிய தொகையை வழங்கக் கோரி கலைமகள் சபா உறுப்பினர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் 2006ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், 22 ஆண்டுகள் கடந்தும் முதலீட்டாளர்களுக்கு உரிய பணத்தை வழங்கவில்லை எனக்கூறி கலைமகள் சபா நிர்வாகத்தை நிர்வகிக்க உதவி தலைமைப் பதிவாளர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை சிறப்பு அதிகாரியாக 3 வாரங்களில் நியமிக்க வணிகவரி துறை செயலருக்கு உத்தரவிட்டார். தற்போது நிர்வாகத்தைக் கவனிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரியை அந்த பொறுப்பிலிருந்து விடுவித்தும் உத்தரவிட்டார்.