×

கூட்டுறவு சங்க தற்காலிக ஊழியர்களுக்கு ஓர் நற்செய்தி… உயர் நீதிமன்றம் வழங்கிய இனிய தீர்ப்பு!

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், கூட்டுறவு சங்கங்களின் சார்பில் சிறப்பு அரசு பிளீடர்கள் பால ரமேஷ், எல்.பி. சண்முகசுந்தரம், மனுதாரர்கள் சார்பில் சி. பிரகாசம் உட்பட பலரும் ஆஜராகி வாதிட்டனர். அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி
 

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், கூட்டுறவு சங்கங்களின் சார்பில் சிறப்பு அரசு பிளீடர்கள் பால ரமேஷ், எல்.பி. சண்முகசுந்தரம், மனுதாரர்கள் சார்பில் சி. பிரகாசம் உட்பட பலரும் ஆஜராகி வாதிட்டனர். அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இன்று காலையில் தீர்ப்பு வழங்கினார்.

அத்தீர்ப்பில், “கூட்டுறவு சங்கங்களில் தற்காலிகமாக பல ஆண்டுகளாக பணியாற்றிவரும் ஊழியர்களை அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இந்த உத்தரவு வழக்கு தொடர்ந்தவர்களுக்கு மட்டும் அல்லாமல், வழக்கு தொடராத தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கும் பொருந்தும். இந்த உத்தரவினை 8 வாரத்தில் அமல்படுத்த வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.