×

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் அப்பல்லோவில் அனுமதி!

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செரிமான கோளாறு காரணமாக மதுசூதனன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக உடல்நிலை காரணமாக அதிமுக அவைத்தலைவர் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியானது. அதற்கு காரணம் மதுசூதனனுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டுவருகிறது. ஆனால் உயிர் உள்ளவரை தானே அவைத்தலைவராக இருப்பேன் என மதுசூதனன் அண்மையில் தெரிவித்திருந்தார். அதற்கு காரணம் அவைத்தலைவர் பதவி ஜெயலலிதா கொடுத்தது என்றும் தெரிவித்திருந்தார்.
 

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செரிமான கோளாறு காரணமாக மதுசூதனன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக உடல்நிலை காரணமாக அதிமுக அவைத்தலைவர் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியானது. அதற்கு காரணம் மதுசூதனனுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டுவருகிறது. ஆனால் உயிர் உள்ளவரை தானே அவைத்தலைவராக இருப்பேன் என மதுசூதனன் அண்மையில் தெரிவித்திருந்தார். அதற்கு காரணம் அவைத்தலைவர் பதவி ஜெயலலிதா கொடுத்தது என்றும் தெரிவித்திருந்தார்.