மகனை ஏற்றுக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்! பொறுப்புள்ள அப்பாவாக இருப்பேன் என அறிக்கை
என் வாழ்நாள் முழுவதும் ராகா ரங்கராஜின் நலன், மகிழ்ச்சி மற்றும் எதிர்காலத்திற்குத் துணை நிற்பேன் என பிரபல சமையல் நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜ் கூறியுள்ளார்.
திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா வழக்கு தொடர்ந்த நிலையில், அவருக்கு பிறந்த மகனை ஏற்றுக்கொண்டுள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ்.
இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது மகன் ராகாவிற்கு, ஒரு தந்தையாக செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் கடந்த ஆறு மாதங்களாக முழுப் பொறுப்புடனும் அன்புடனும் செய்து வருகிறேன். இனி, என் வாழ்நாள் முழுவதும் ராகா ரங்கராஜின் நலன், மகிழ்ச்சி மற்றூம் எதிர்காலத்திற்காக முமுப் பொறுப்புடனும் அன்புடனும் துணை நிற்பேன் என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மகன் குறித்து மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக ஜாய் கிரிஸில்டா வெளியிட்ட பதிவில், “உண்மை தனக்கான இடத்தை தானே அடையும். சில போராட்டங்கள் வெற்றிக்காக அல்ல, ஒரு குழந்தையின் எதிர்காலத்திற்காக... இன்று, ஒரு தாயின் மனம் அமைதியடைந்தது..” எனக் குறிப்பிட்டுள்ளார்.