ஜாய் கிரிசில்டா - மாதம்பட்டி ரங்கராஜ் நீதிமன்றத்தில் ஆஜர்
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா ஆகிய இருவரும் ஆஜராகினர்.
ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவை தாக்கியதாக சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்ற உத்தரவின்படி இருவரும் இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். பதினெட்டாவது மேஜிஸ்திரேட் முன்பு விசாரணை நடைபெற்றது. இரு தரப்பினரிடமும் நீதிபதி விளக்கங்கள் பெற்றார். வழக்கை முன்னிட்டு இருவரும் கவுன்சிலிங் பெற வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியது. அடுத்த மாதத்துக்குள் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள நீதிமன்றம் அறிவுறுத்தியது. கவுன்சிலிங் அறிக்கையை அடிப்படையாக கொண்டு வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அடுத்த விசாரணைக்கு பிப்ரவரி 13 அன்று இருவரும் மீண்டும் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.