காலையில் முதல் பொண்டாட்டி! மாலையில் இரண்டாவது பொண்டாட்டி... வைரலாகும் மாதம்பட்டி ரங்கராஜ்
தனது குழந்தையான ராகாவின் முதல் பிறந்தநாளை மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய்கிரிசில்டா ஆகியோர் இணைந்து கொண்டாடினர்.
மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்பான இரு வேறு சம்பவம் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது. காலையில் முதல் மனைவி ஸ்ருதியுடன் தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் மகன் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். மாலையில் ஜாய் கிரிசில்டாவுடன் இணைந்து தனது மகன் ராகாவின் முதல் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
தனது இரண்டாவது மனைவியின் முதல் குழந்தையின் முதலாவது பிறந்த நாளை தனது முதல் மனைவி மற்றும் அவரது இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக கொண்டாடினார் மாதம்பட்டி ரங்கராஜ். இதில் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கலந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்தியில், மகனின் முதல் பிறந்தநாளை இருவரும் இணைந்து கொண்டாடியிருப்பது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.