×

முதல்வருக்கு திடீர் உடல்நிலை குறைவு ஏன்?- அமைச்சர் மா.சு.பேட்டி

 

 

மு.க. முத்து மறைவு நாளன்று முதலமைச்சர் சாப்பிடவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு , நேற்று முன்தினம் (ஜூலை 21) காலை நடைபயிற்சியின் போது லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நண்பகலில் அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தேவையான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், 3 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில் மருத்துவமனையிலேயே இருந்து வரும் முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்தவாறே அரசு அலுவல் பணிகளையும் கவனித்து வருகிறார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சகோதரர் மு.க. முத்து மறைவால் ஒரு நாள் முழுவதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாப்பிடாமல் இருந்துள்ளார். அத்துடன் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் வரை நடைபயணம் மேற்கொண்டபோது, அவருக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமுடன் உள்ளார், முதலமைச்சருக்கு சோர்வுதான் ஏற்பட்டுள்ளது. பயப்படும் அளவுக்கு ஒன்றும் இல்லை. மு.க. முத்து இறப்பின்போது முதலமைச்சர் கூடுதலாக நேரம் செலவிட்டதால் சோர்வு ஏற்பட்டது. அன்றைய தினம் முழுவதும் தொடர்ச்சியாக நின்றுகொண்டே இருந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிகிச்சை முடிந்து எப்போது வீடு திரும்புவார் என மருத்துவர்கள் விரைவில் கூறுவார்கள்” என்றார்.