×

இனி வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம்!

 

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் கொரோனா தடுப்பூசிகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், “வீடு தேடி தடுப்பூசி திட்டம் மூலம் கடந்த நான்கு நாட்களில் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இன்றைக்கு 4,32,836 தடுப்பூசிகள் செலுத்தபட்டுள்ளது. தமிழகத்தில் 73% முதல் தவணையும், 36% இரண்டாம் தவணையும் போடப்பட்டுள்ளது. ஒரு கோடியே 31 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது.

வாரத்திற்கு இரண்டு மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்த முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். எனவே வாரத்திற்கு வியாழன் மற்றும் ஞாயிறு என இரண்டு நாட்கள் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும். 70 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இரண்டாம் தவணை தடுப்பூசி போட வேண்டும். எனவே இரண்டு முறை தடுப்பூசி முகாம் மூலம் அதிகளவில் தடுப்பூசி போடப்படும் என நம்பிக்கை. கள பணியாளர்கள், செவிலியர்கள் மெகா தடுப்பூசி முகாமில் பணியற்றுவப்பர்களுக்கு திங்கள் கிழமை விடுப்பு. இதுவரை நடத்தப்பட்ட 8 மெகா தடுப்பூசி முகாமில் 1 கோடியே 65 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இரண்டு தினங்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சலால் 493 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 463 ஆக குறைந்துள்ளது, இதனால் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் படி படியாக குறைந்து வருகின்றனர்” எனக் கூறினார்.