நடிகர் வாகை சந்திரசேகரை நேரில் சந்தித்து வாழ்த்திய மா.சுப்பிரமணியன்!
நடிகர் வாகை சந்திரசேகர், 'நிழல்கள், ஒரு தலை ராகம்" படத்தின் மூலம் புகழ்பெற்றார். அதன் பிறகு குணசித்தர நடிகராக 300 படங்களுக்கு மேல் நடித்தார். 2002ம் ஆண்டு வெளியான "நண்பா நண்பா" படத்திற்காக சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருதை பெற்றார்.
சட்டசபை உறுப்பினராக பணியாற்றிய இவர் இயல் இசை நாடக மன்ற தலைவராகவும் பணியாற்றினார். இந்த நிலையில் அவருக்கு சங்கீத நாடக அகாடமியின் புரஸ்கார் விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
நேற்று டில்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு அவருக்கு புரஸ்கர் விருது வழங்கி கவுரவித்தார்.
இந்நிலையில் ஒன்றிய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான “புரஸ்கார்”விருதினை அண்மையில் மேதகு குடியரசு தலைவர் அவர்களின் வாயிலாக பெற்ற திரு.வாகை சந்திரசேகர் அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார் முன்னாள் அமைச்சர் மா.சுப்ரமணியன்.
ஒன்றிய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான “புரஸ்கார்”விருதினை அண்மையில் மேதகு குடியரசு தலைவர் அவர்களின் வாயிலாக பெற்ற திரு.வாகை சந்திரசேகர் அவர்களை சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது… #Masubramanian pic.twitter.com/oOvOgVdqVQ
— Ma Subramanian - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@Subramanian_ma) August 15, 2026