×

காலியாகும் பிரிட்ஜ், மிக்சி... தமிழகத்தில் குறைந்த மின்னழுத்த பிரச்னை! 

 

தமிழகத்தில் குறைந்த மின்னழுத்த பிரச்சனை ஏற்படுவது மக்களுக்கு பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் 'லோ வோல்டேஜ்' பிரச்னை தொடர்வதால், வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மின்னழுத்தம் ஏற்ற, இறக்கமாக வருவதால் மின்விசிறி, ஏசி, மோட்டார் உள்ளிட்டவை சரியாக இயங்குவதில்லை. டிவி, பிரிஜ், மிக்சி, இன்வெர்ட்டர் போன்ற சாதனங்களும் பழுதடைகின்றன. சிறு, குறுந்தொழில் நிறுவனங்களின் இயந்திரங்கள் பாதிக்கப்பட்டு உற்பத்தி தடைபடுவதாக தொழில் அமைப்புகள் புகார் தெரிவித்துள்ளன. கூடுதல் மின்மாற்றிகள் இல்லாமை, மின் சாதனங்களில் பழுது மற்றும் முறையான பராமரிப்பு இல்லாமை குறைந்த மின்னழுத்தத்துக்கான காரணங்களாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “சென்னை முதல் கோவை வரை நிலவும் லோ-வோல்டேஜ் பிரச்னையால் மக்களின் டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் பழுதாவதாக ஊடகங்களில் வரும் செய்தி கவலையளிக்கிறது. வெயில் காலம் முடிந்தும் மின் தேவையைச் சரியாகக் கையாளத் தெரியாத தமிழக அரசு, மக்கள் மீது தேவையற்ற பொருளாதாரச் சுமையை ஏற்றியுள்ளது. இந்த நிர்வாகத் தோல்வியும் அரசின் மெத்தனப் போக்கும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. வீடுகள் மட்டுமல்லாது, கோவை, விழுப்புரம் போன்ற தொழில் நகரங்களில் நிலவும் லோ-வோல்டேஜ் பிரச்னையால், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் பழுதாகி உற்பத்தி மொத்தமாக முடங்கியுள்ளதாகத் தொழில்துறையினரே வேதனையுடன் தெரிவிக்கின்றனர். ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே தொழில்துறையைச் சீரழித்த பெருமை இந்த அரசையே சாரும். மின் வாரியப் பராமரிப்புப் பணிகளில் தோல்வி ஏற்பட்டுள்ளதை அதிகாரிகளே ஒப்புக்கொள்ளும் நிலையில், மின்துறை அமைச்சர் ற்று வாக்குறுதிகள் அளிப்பதை நிறுத்திவிட்டு, இப்பிரச்னைக்குத் தொழில்நுட்ப ரீதியாக போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.