×

சென்னை சென்ட்ரலில் ஒலிபெருக்கிகள் மீண்டும் இயக்கம் 

 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அறிவிப்புகள் வழக்கம்போல் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படுகின்றன.

ஒலி மாசை குறைக்கும் வகையில் ரயில் தகவல் அறிவிப்புகள் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிக்கப்படாமல் இருந்ததற்கு பார்வை செவித்திறன் மாற்றுத்திறனாளிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஒலி மாசை குறைப்பதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அறிவிப்புகள் நிறுத்தப்பட்ட  நடவடிக்கைகள் பலனளிக்காது என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் ரயில் நிலையங்களுக்கே உரித்தான மணி சத்தத்துடன் கூடிய தமிழ், ஆங்கில, இந்தி அறிவிப்புகள் தான் ரயிலில் பயணிக்கும் அனைத்து தரப்பு மக்களின் நம்பகத்தகுந்த வழிகாட்டி மீண்டும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒலிக்க தொடங்கியுள்ளது. இதனால் அவசரமாக வெளியூருக்கு செல்லும் பொதுமக்களும், படிக்கத்தெரியாதவர்கள் மற்றும் செவித்திறன் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள்,  ரயில் புறப்படும் நேரம், ரயில் வந்து சேரும் நேரம், நடைமேடை எண், ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரம்,  தாமதமாகும் ரயில் விவரம் என அனைத்தையும் ஒலிபெருக்கி மூலம் தெரிந்துகொள்கின்றனர். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் என இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் இருந்தும் தமிழ்நாட்டிற்கு வரும் மக்கள் வருகை தரும் இடமாக உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மீண்டும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகள் வெளியிடப்படுவது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.