"100 அடி பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்த லாரி"- பதைபதைக்க வைக்கும் பயங்கர விபத்து
கோத்தகிரி அருகே 100 அடி பள்ளத்தில் லாரி தலைகீழாகக் கவிழ்ந்தது. நல்வாய்ப்பாக ஓட்டுநர் உயிர் தப்பினார்.
நீலகிரி: கோத்தகிரி அருகே மர லோடு ஏற்றி வந்த லாரி, மற்ற வாகனங்களுக்கு வழிவிட ஓரத்தில் நின்று பாரம் தாங்காமல் 100 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்து விபத்து!
— Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர் (@Autokabeer) November 1, 2026
மரங்கள் சிதறி விழுந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பினார் பதைபதைக்க வைக்கும் வீடியோ!#Nilgiris #Kotagiri #Lorry pic.twitter.com/T46tRO9pUa
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே சாலையோர பள்ளத்தில் லாரி உருண்டு விழுந்தது. சாலை ஓரத்தில் லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுனர் இறங்கிய நேரத்தில் சாலை ஓரத்தில் இருந்த ஈரம் மண் காரணமாக லாரி கவிழ்ந்து விபத்துகக்குள்ளானது. மரக்கட்டைகளை ஏற்றி வந்த லாரி பாரம் தாங்காமல் சாலையோரத்தில் உருண்டு 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. அப்போது லாரியில் இருந்த மரங்கள் சிதறி விழுந்தன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பித்துள்ளார். லாரி பள்ளத்தில் விழுந்த வீடியோ காட்சிகள் பார்ப்பவர்களை பதைபதைக்க செய்துள்ளது.