×

ரயில்வே கேட்டில் மோதிய லாரி - ரயில்கள் தாமதம்

 

சிவகங்கை, மானாமதுரை அருகே ரயில்வே கேட்டில் லாரி மோதி விபத்துக்குள்ளானது.

கடந்த சில தினங்களுக்கு முன் கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் ரயில்வே லெவல் கிராசிங் கேட் கீப்பர் தூங்கியதால் ரயில் மோதி பள்ளி வேனில் சென்ற முன்று மாணவர்கள் பரிதாபமாக பலியாகினர்.

இந்நிலையில் சிவகங்கை, மானாமதுரை அருகே ரயில்வே கேட்டில் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதனால் பயணிகள் ரயில் பாதி வழியிலேயே நிற்கிறது. லெவல் க்ராசிங்கில் கேட்டை அடைக்கும்போது லாரி மோதி ரயில்வே கேட் மின் கம்பி மீது உரசியதில் நடுவழியில் ரயில்கள் நிற்கின்றன. அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு பாதிப்பை ரயில்வே ஊழியர்கள் சரி செய்தனர்.