×

விமரிசையாக நடைபெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா சந்தனக்கூடு விழா

 

உலக புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 465, ம் ஆண்டு சந்தனக்கூடு விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

நாகூர் ஆண்டவர் என போற்றப்படும் செய்யது சாகுல் ஹமீது பாதுஷாவின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் கந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இவ்வாண்டு உலக புகழ் பெற்ற நாகூர் தர்காவின் 465-ம் ஆண்டு கந்தூரிவிழா கடந்த 4,ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தாபூத் எனும் சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று இரவு நாகையில் நடைபெற்றது.  

மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு, நாகையிலுள்ள முக்கிய வீதிகள் வழியாக நாகூர் தர்காவிற்கு சென்றது. அப்போது ஊர்வலத்தில் வழி நெடுகிலும் நின்றிருந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சந்தனக்கூடின் மீது பூக்களை தூவி ஆண்டவரை வேண்டி வழிபாடு செய்தனர். இதனை தொடர்ந்து அதிகாலை நாகூர் ஆண்டவர் தர்காவில்  சந்தனம் பூசும் வைபவம் நடைபெற்றது.