×

850 இடங்களாக உயர்கிறது மக்களவை! தொகுதி மறுவரையறை மசோதாவைத் தாக்கல் செய்தது மத்திய அரசு..!

 

மக்களவை – பேரவைகளில் 33 சதவீத மகளிா் இடஒதுக்கீட்டை 2029-ஆம் ஆண்டுமுதல் அமலாக்கவும், அதற்கு ஏதுவாக மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து 850 வரை அதிகரிக்கவும் வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 131-ஆவது திருத்த மசோதா உள்பட மூன்று மசோதாக்களை அறிமுகம் செய்து, விவாதித்து நிறைவேற்றும் நோக்கில் இந்த அமா்வு நடைபெற்று வருகிறது.

மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்களை மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் இன்று தாக்கல் செய்தார். 

இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டவுடன் காங்கிரஸ் தரப்பில் திரும்பப் பெற வலுயுறுத்தப்பட்டது.
இந்திய கூட்டாட்சி அமைப்பின் மீதான தாக்குதல் இது; அரசியல் சாசனத்தையே கபளீகரம் செய்ய நினைக்கிறது பாஜக. இந்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் காங்கிரஸ் எம்பி வேணுகோபால் தெரிவித்தார்.

திமுகவின் நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர்.பாலு, “2023ல் நிறைவேறிய மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மட்டுமே ஆதரவு; தொகுதி மறுவரையறை மசோதாவை சமரசம் இன்றி எதிர்க்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதாவை அறிமுகம் செய்ய வாக்கெடுப்பு நடைபெற்றது.

மொத்தம் = 333/543
ஆதரவு =251
எதிர்ப்பு =185
வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதால் மத்திய அரசு கொண்டு வந்த 3 மசோதாக்களும் மக்களவையில் அறிமுகம் செய்யப்படுகிறது.

மூன்று மசோதாக்கள் சார்பாக நாளை மாலை 4 மணி வரை விவாதம் நடத்தலாம் என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்