×

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு - சதவீத குளறுபடி ஏற்பட்டதற்கான காரணம் என்ன?

 

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு அன்று, சதவீத குளறுபடி ஏற்பட்டதற்கான காரணம் என்ன?என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கமளித்துள்ளார். 

இதுதொடர்பாக சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்த போது, "செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் வாக்குப்பதிவு சதவீதம் கணக்கிடப்பட்டதால் தவறு நடைபெற்றது. செயலியில் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களும் கட்டாயமாக அப்டேட் செய்ய வேண்டும் என்று எந்த உத்தரவும் இல்லை. ஒரு சிலர் மட்டுமே அப்டேட் செய்ததால் சதவீத குளறுபடி ஏற்பட்டது . 

ஒரு சிலர் மட்டுமே அப்டேட் செய்தார்கள். இதன் காரணமாகவே வாக்குப்பதிவு சதவீத குளறுபடி ஏற்பட்டது. தேர்தல் நடத்தும் அதிகாரி கையெழுத்து போட்டு கொடுக்கும் தகவல் வர கால தாமதம் ஆகும் என்பதால் செயலி மூலமாக அப்டேட் செய்தோம்" என்றார்.