மக்களவைத் தேர்தல் 2024 - விசிக வேட்பாளர்கள் அறிவிப்பு
Mar 19, 2024, 12:06 IST
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் , மனிதநேய மக்கள் கட்சி , மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. குறிப்பாக மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த முறை போட்டியிட்ட விழுப்புரம், சிதம்பரம் தனித் தொகுதிகளில் மீண்டும் போட்டியிடுகிறது. தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வி.சி.க. தலைவர் திருமாவளவன் கையெழுத்தானது.