மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தல்- நாளை முதல் வேட்புமனு தாக்கல்
ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை ( ஜுன் 1) முதல் தொடங்குகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.வி.சண்முகம், தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், தமிழ்நாட்டின் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இதற்கு ஜூன் 18ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதன்படி, ஜூன் 1ம் தேதி ( நாளை ) வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. ஜூன் 8ம் தேதிவேட்பு மனு திரும்ப பெற கடைசி நாள். ஜூன் 9ம் தேதிவேட்பு மனுக்கள் மீது பரிசீலனை. ஜூன் 11 ம் தேதி வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாளாகும். ஒருவருக்கு மேல் போட்டியிடும் பட்சத்தில், ஜூன் 18ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படும். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிக சட்டமன்ற உறுப்பினர்களுடன் தமிழக வெற்றி கழகம் தனிப்பெரும் கட்சியாக உள்ளதால் இந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தமிழக வெற்றி கழகம் கைப்பற்றும் நிலை தான் உள்ளது