×

பேருந்துகளில் 75% பேர் பயணிக்க அனுமதி!  ஊரடங்கு கட்டுப்பாடுகள் என்ன?
 

 

தமிழ்நாட்டில் கொரோனா பரஃப்வல் அதிகரித்துவருவதை அடுத்து கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 13,990 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28 லட்சத்து 14 ஆயிரத்து 276க அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 62ஆயிரத்து 767 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலுடன் உருமாறிய ஒமிக்ரான் பரவலும் கலந்துள்ளதால் அதனை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவருகிறது. அதன்படி, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கூடுதல் கட்டுப்பாடுகளின் விவரம் பின்வருமாறு...

ஊரடங்கு கட்டுப்பாடுகள் என்னென்ன?

  • 14 முதல் 18ம் தேதி வரை வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி இல்லை
  • ஜன.16 ஞாயிறு முழு ஊரடங்கு அமல்
  • மிக அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து, பிற காரணங்களுக்காக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுரை
  • பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்களுக்கு 75% இருக்கை அனுமதியுடன் பொது பேருந்துகள் இயக்கம்
  • ஊரடங்கு காலங்களில் தடை செய்யப்பட்ட மற்றும் அனுமதிக்கப்பட்ட இதர செயல்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும்
  • ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என்பதால் இரவு நேர ஊரடங்கு தொடரும்.