×

பொதுமுடக்க விதிமீறல்.. ரூ.16 கோடியை நெருங்கும் அபராதம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாளைக்கு கொரோனா பாதிப்பு 400 முதல் 600 வரையிலேயே அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 3,940 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,275 ஆக அதிகரித்துள்ளது. இந்த கொடிய வகை நோய்த்தொற்றில் இருந்து மக்களைக் காக்க ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இருப்பினும், அரசு விதிகளை
 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாளைக்கு கொரோனா பாதிப்பு 400 முதல் 600 வரையிலேயே அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 3,940 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,275 ஆக அதிகரித்துள்ளது. இந்த கொடிய வகை நோய்த்தொற்றில் இருந்து மக்களைக் காக்க ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இருப்பினும், அரசு விதிகளை மீறி வெளியே செல்பவர்கள் மீது காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், கட்டுப்பாடுகளைப் பின்பற்றாத வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்தும் அபராதம் விதித்தும் வருகின்றனர்.

இந்த நிலையில் ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராதம் ரூ.16 கோடியை நெருங்குவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது முடக்க விதிகளை மீறிய 5,71,492 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் 7,61,118 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் இதுவரை 6,96,583 வழக்குகள் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.