×

ஊரடங்கை மீறி சுற்றித் திரிந்தவர்களிடம் ரூ.21.44 கோடி அபராதம் வசூல்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இம்மாத தொடக்கத்தில் இருந்து கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு நீடிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய இருப்பதால், மீண்டும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து தலைமை செயலாளர் சண்முகம், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அறிவிப்பு, இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என
 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இம்மாத தொடக்கத்தில் இருந்து கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு நீடிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய இருப்பதால், மீண்டும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து தலைமை செயலாளர் சண்முகம், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அறிவிப்பு, இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ஊரடங்கை மீறி சுற்றித்திரிபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறி சுற்றியவர்களிடம் இருந்து ரூ.21.44 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. அதே போல, இதுவரை ஊரடங்கை மீறிய 6.92 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், தடையை மீறி வாகனங்களில் சுற்றிய 9.90 லட்சம் பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், ஊரடங்கு விதிமீறல் தொடர்பாக 8.95 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.