×

புறநகர் ரயில்கள் கும்மிடிப்பூண்டி வரை மட்டும் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு! 

 

புறநகர் ரயில்கள் கும்மிடிப்பூண்டி வரை மட்டும் இயக்கப்படும்  என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது.  இதனால் சென்னை மாநகர் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலை போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.  523 இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது 11 சுரங்கப்பாதைகள் 20 சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் வெள்ள பாதிப்பு காரணமாக குறைந்த அளவில் மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டன.  அதேபோல மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில்களும் குறைந்த அளவிலேயே இயங்கின.

அத்துடன்  தொடர் மழை காரணமாகச் சென்னை சென்ட்ரல்-அரக்கோணம், சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை- செங்கல்பட்டு, சென்னை கடற்கரை- வேளச்சேரி  மார்க்கமாக இயக்கப்படும் மின்சார ரயில்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சூலூர் பேட்டை அருகில் கலங்கி நீர் தேக்கத்தில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதால் , சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சூலூர்பேட்டை வரை இயக்கப்படும் புறநகர் ரயில்கள்  கும்மிடிப்பூண்டி வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.