தூத்துக்குடியில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
தூத்துக்குடியில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி பனிமயமாதா பேராலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும். இந்த தேவாலயம் போர்ச்சுகீசியர்களால் கட்டப்பட்டது. இது சுமார் 1,500 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு 12 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆலயத்தில் சாதி, மத பாகுபாடு இன்றி அனைவரும் கொண்டாடும் திருவிழா, ஜூலை 26-ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 5-ம் தேதி வரை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் தூத்துக்குடியில் 443வது ஆண்டு பனிமயமாதா பேராலய திருவிழா வரும் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. தூய பனிமய மாதா பேராலய திருவிழாவையொட்டி, முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான அன்னையின் திருவுருவ பவனி ஆகஸ்ட் 6-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் தூய பனிமயமாதா பேராலய பெரு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 5-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை ஈடு செய்ய ஆகஸ்ட் 9ஆம் தேதியை அலுவலக நாளாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவித்துள்ளார்.