திருவாரூர் மாவட்டத்திற்கு 28-ம் தேதி உள்ளூர் விடுமுறை..!
அதனை தொடர்ந்து ராஜகோபுரங்களை புதுப்பிக்கும் பணிகள் உள்ளிட்ட மற்ற திருப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று முடிவடைந்துள்ளது. அரசு நிதி மற்றும் கொடையாளர் நிதி என சுமார் ரூ.16 கோடி செலவில் ராஜகோபுரம் உள்ளிட்ட 16 கோபுரங்கள் 18 விமானங்கள் 24 சன்னதிகள் புதுப் பிக்கப்பட்டுள்ளன.
கோவிலின் முன்புறம் முழுவதும் பேவர் பிளாக் கற்கள் கொண்டு தளம் அமைக்கப்பட்டுள்ளது. உட்புறம் வளாகத்திலும் கருங்கல் கொண்டு தளம் அமைக்கப்பட்டுள்ளது. கோபுரங்கள், சன்னதிகளுக்கு புது வர்ணங்கள் பூசப்பட்டு, வண்ண மின்விளக்குகள் அலங்காரத்தில் புதுப்பொலிவுடன் கோவில் காட்சியளிக்கிறது.
15 ஆண்டுகள் கழித்து குடமுழுக்கு நடைபெற உள்ளதால் மன்னார்குடி மட்டுமின்றி சுற்றுவட்டார மாவட்டங்கள் தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 16 கோபுரங்களிலும் மேலே உள்ள கலசங்களுக்கு குடமுழுக்கு செய்வதற்காக சாரம் கட்டும் பணிகள் நிறைவடைந்துள்ளது. குடமுழுக்கையொட்டி கோவில் முன்புறம் இரு பக்கமும் கருங்கல் யானை சிற்பங்கள் அழகுற வடிமைக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளன.
குடமுழுக்கை காண வரும் பக்தர்கள் வசதிக்காக விரிவான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம், நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை போலீசார் இணைந்து செய்துள்ளனர். பொதுமக்களுக்கு குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ராஜகோபாலசுவாமி திருக்கோவில் குடமுழுக்கு வரும் 28ம் தேதி நடைபெற உள்ள நிலையில், திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை மறுநாள் (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு 07.02.2026 சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.