22ம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
Oct 11, 2026, 10:11 IST
முத்துப்பேட்டை தர்கா விழாவை ஒட்டி வரும் 22ம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்புவானோடையில் உள்ள பிரசித்தி பெற்ற ஷேக்தாவூது ஆண்டவர் தர்காவின் 725-ம் ஆண்டு பெரிய கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழாவை ஒட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு வரும் 22ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடு செய்ய வரும் 24ம் தேதி சனிக்கிழமை வேலைநாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.