தூத்துக்குடிக்கு ஆக.5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
Jul 20, 2026, 19:10 IST
தூத்துக்குடி தூய பனிமய மாத ஆலய ஆண்டு பெருவிழாவையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பனிமய மாதா பேராலயம் தூத்துக்குடியில் அமைந்துள்ள கத்தோலிக்க திருச்சபையின் பேராலயமாகும். இப்பேராலயம் 16ஆம் நூற்றாண்டில் போர்த்துகிசிய பாணியில் கட்டப்பட்டதாகும். 1982ஆம் ஆண்டு இத்திருக்கோவிலின் 400ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் இத்திருத்தலத்தைப் பேராலயமாக உயர்த்தினார்.
இந்நிலையில் புகழ்பெற்ற தூய தூத்துக்குடி தூய பனிமய மாதா ஆலய ஆண்டு பெருவிழாவையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.