☰
×

அக்.22ஆம் தேதி தஞ்சாவூருக்கு உள்ளூர் விடுமுறை

 

ராஜராஜ சோழனின் சதய விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அக்டோபர் 22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தஞ்சாவூர் பெரிய கோயில் என்றால் சோழ மாமன்னர் ராஜராஜ சோழன் தான் நினைவுக்கு வருவார். அந்தளவிற்கு புகழ்பெற்ற மன்னராக திகழ்ந்தவர் ராஜராஜ சோழன். அவரின் பிறந்த நாள் ஐப்பசி சதய நட்சத்திரத்தில் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 1041ஆவது சதய விழா நாளை கொண்டாடப்படவுள்ளது. மங்கல இசையுடன் தொடங்கும் இவ்விழா ஆண்டுதோறும் இரண்டு நாட்களுக்கு வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.

இந்நிலையில் ராஜராஜசோழனின் 1041ஆவது சதய விழாவை முன்னிட்டு அக்டோபர் 22இல் தஞ்சாவூரில் உள்ள பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 1041ஆம் ஆண்டு சதய திருநாள் வரும் அக்டோபர் 21, 22 ஆகிய இரு தினங்களில் கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடதக்கது.