தஞ்சை மாவட்டத்திற்கு நவ.1ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!
ராஜராஜ சோழனின் 1,040வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு நவம்பர் 1 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.
மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040-வது சதயவிழா வரும் 31 மற்றும் 1ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இந்த விழாவையொட்டி வரும் 31 ஆம் தேதி பட்டிமன்றம், நாட்டியம் ,நாடகம் ,திருமுறை அரங்கம் ,கருத்தரங்கம், கவியரங்கம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. அத்துடன் பெருவுடையார் மற்றும் பெரியநாயகி ஆகியோருக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெறவுள்ளன. 31 ஆம் தேதி மாலை 1040 பரதக்கலைஞர்கள் பங்கேற்கும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்நிலையில் தஞ்சாவூரில் மாமன்னன் ராஜராஜசோழன் சதயவிழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு நவம்பர் 1 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.