ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மே 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
ஏர்வாடி தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மே 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஏர்வாடி சுல்தான் சையது இப்ராஹிம் பாதுஷா ஒளி உள்ளார் தர்காவின் 852ம் ஆண்டு மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா மே 11 ஆம் தேதி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இதில் உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பிப்பது வழக்கம். சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். இந்த திருவிழாவில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொள்வர்.
இதனையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மே 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மே 23 அன்று பணிநாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் அறிவித்துள்ளார்.