×

இன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..! 

 

புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமிதரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், முத்துமாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா இன்று நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முத்துமாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி இன்று (ஜன. 28 - புதன்கிழமை) புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்