நீலகிரி மாவட்டத்திற்கு மே 18ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!
May 16, 2026, 07:00 IST
நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு வரும் மே 18ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நீலகிரி மாவட்டத்தில், எதிர்வரும் 18.05.2026 (திங்கள்கிழமை ) அன்று 128-வது மலர்க்கண்காட்சி நடைபெறவுள்ளதால், மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இந்த நாளில் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும். மேற்கண்ட 18.05.2026 விடுமுறை நாளினை ஈடுசெய்ய எதிர்வரும் ஜூன் 6ஆம் தேதி (சனிக்கிழமை) இம்மாவட்டத்திற்கு பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.